Thirumazhisaialwar_Thiruchandaviruththam


திருமழிசை ஆழ்வார் – திருச்சந்த விருத்தம்

Azhwar Paasuram Count Video Audio
திருமழிசை ஆழ்வார் திருச்சந்த விருத்தம்
7

Total
7

1   திருச்சந்த விருத்தம் – தனியன் – 1

திருக் கச்சி நம்பி அருளிச் செய்த தனியன்

தருச்சந்த பொழில் தழுவு தாரணியின் துயர் தீர *

திருச்சந்த விருத்தம் செய் திரு மழிசைப் பரன் வருமூர் *

கருச்சந்தும் காரகிலும் கமழ் கோங்கும் மண நாறும் *

திருச்சந்ததுடன் மருவு திருமழிசை வளம் பதியே

  

 

  

 

  


2   திருச்சந்த விருத்தம் – தனியன் – 2

திருக் கச்சி நம்பி அருளிச் செய்த தனியன்

உலகும் மழிசையும் உள் உணர்ந்து * தம்மில்

புலவர் புகழ் கோலால் தூக்க * உலகு தன்னை

வைத்தெடுத்த பக்கத்தும் * மா நீர் மழிசையே

வைத்தெடுத்த பக்கம் வலிது

  

 

  

 

  


3   திருமழிசை ஆழ்வார் – திருச்சந்த விருத்தம் – 1

பூநிலாய வைந்துமாய்ப் புனற்கண்நின்ற நான்குமாய் *

தீநிலாய மூன்றுமாய்ச் சிறந்தகா லிரண்டுமாய் *

மீநிலாய தொன்றுமாகி வேறுவேறு தன்மையாய் *

நீநிலாய வண்ணநின்னை யார்நினைக்க வல்லரே

 

  

 

  

 

  


4   திருமழிசை ஆழ்வார் – திருச்சந்த விருத்தம் – 2

ஆறுமாறு மாறுமா யோரைந்துமைந்து மைந்துமாய் *

ஏறுசீரி ரண்டுமூன்று மேழுமாறு மெட்டுமாய் *

வேறுவேறு ஞானமாகி மெய்யினொடு பொய்யுமாய் *

ஊறொடோசை யாயவைந்து மாய ஆய மாயனே

 

  

 

  

 

  


5   திருமழிசை ஆழ்வார் – திருச்சந்த விருத்தம் – 3

ஐந்துமைந்து மைந்துமாகி யல்லவற்று ளாயுமாய் *

ஐந்துமூன்று மொன்றுமாகி நின்றவாதி தேவனே *

ஐந்துமைந்து மைந்துமாகி யந்தரத்த ணைந்துநின்று *

ஐந்துமைந்து மாயநின்னை யாவர்காண வல்லரே

 

  

 

  

 

  


6   திருமழிசை ஆழ்வார் – திருச்சந்த விருத்தம் – 4

மூன்றுமுப்ப தாறினோடொ ரைந்துமைந்து மைந்துமாய் *

மூன்றுமூர்த்தி யாகிமூன்று மூன்றுமூன்று மூன்றுமாய் *

தோன்றுசோதி மூன்றுமாய்த் துளக்கமில் விளக்கமாய் *

ஏன்றெனாவி யுள்புகுந்த தென்கொலோவெம் மீசனே

 

  

 

  

 

  


7   திருமழிசை ஆழ்வார் – திருச்சந்த விருத்தம் – 5

நின்றியங்கு மொன்றலாவு ருக்கடோறும் ஆவியாய் *

ஒன்றியுள்க லந்துநின்ற நின்னதன்மை யின்னதென்று *

என்றும்யார்க்கு மெண்ணிறந்த ஆதியாய்நின் னுந்திவாய் *

அன்றுநான்மு கற்பயந்த வாதிதேவ னல்லையே