நாத விந்து


நாத விந்து கலாதி நமோ நம

வேத மந்திர ஸ்வரூபா நமோ நம

ஞான பண்டித ஸ்வாமி நமோ நம … வெகுகோடி

 

நாம சம்பு குமாரா நமோ நம

போக அந்தரி பாலா நமோ நம

நாக பந்த மயூரா நமோ நம … பரசூரர்

 

சேத தண்ட வினோதா நமோ நம

கீத கிண்கிணி பாதா நமோ நம

தீர சம்பிரம வீரா நமோ நம … கிரிராஜ

 

தீப மங்கள ஜோதி நமோ நம

தூய அம்பல லீலா நமோ நம

தேவ குஞ்சரி பாகா நமோ நம … அருள்தாராய்

 

ஈதலும் பல கோலால பூஜையும்

ஓதலும் குண ஆசார நீதியும்

ஈரமும் குரு சீர்பாத சேவையும் … மறவாத

 

ஏழ்தலம் புகழ் காவேரியால் விளை

சோழ மண்டல மீதே மனோஹர

ராஜ கம்பீர நாடாளு நாயக … வயலூரா

 

ஆதரம் பயிலாரூரர் தோழமை

சேர்தல் கொண்டவரோடே முன்னாளினில்

ஆடல் வெம்பரி மீதேறி மா … கயிலையிலேகி

 

ஆதி அந்தவுலாவாசு பாடிய

சேரர் கொங்குவை காவூர் நன்னாடதில்

ஆவினன்குடி வாழ்வான தேவர்கள் … பெருமாளே

 

தீப மங்கள ஜோதி நமோ நம

தூய அம்பல லீலா நமோ நம

தேவ குஞ்சரி பாகா நமோ நம … அருள்தாராய்

 


Nadha Vindhu


Ready Reckoner


Please leave your valuable suggestions and feedback here