088-Thirucchenkundroor


Thirucchenkundroor ( Sri Imayavarappa Perumal Temple )

Azhwar Paasuram Count
நம்மாழ்வார் திருவாய்மொழி 11
Total 11

1   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 8.4.1

** வார்கடா அருவி யானைமா மலையின் மருப்பி ணைக் குவடிறுத் துருட்டி *

ஊர்கொள்திண் பாகன் உயிர்செகுத் தரங்கின் மல்லரைக் கொன்றுசூழ் பரண்மேல் *

போர்கடா வரசர் புறக்கிட மாட மீமசைக் கஞ்சனைத் தகர்த்த *

சீர்கொள்சிற் றாயன் திருச்செங்குன் றூரில் திருச்சிற்றா றெங்கள்செல் சார்வே


2   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 8.4.2

எங்கள்செல் சார்வு யாமுடை அமுதம் இமையவர் அப்பனென் அப்பன் *

பொங்குமூ வுலகும் படைத்தளித் தழிக்கும் பொருந்துமூ வுருவனெம் அருவன் *

செங்கயல் உகளும் தேம்பணை புடைசூழ் திருச்செங்குன் றூர்த்திருச் சிற்றாறு

அங்கமர் கின்ற * ஆதியான் அல்லால் யாவர்மற் றெனமர் துணையே


3   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 8.4.3

என்னமர் பெருமான் இமையவர் பெருமான் இருநிலம் இடந்தவெம் பெருமான் *

முன்னைவல் வினைகள் முழுதுடன் மாள என்னையாள் கின்றேம் பெருமான் *

தென்திசைக் கணிகொள் திருச்செங்குன் றூரில் திருச்சிற்றா றங்கரை மீபால்

நின்றவெம் பெருமான் * அடியல்லால் சரணம் நினைப்பிலும் பிறிதில்லை எனக்கே


4   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 8.4.4

பிறிதில்லை யெனக்குப் பெரியமூ வுலகும் நிறையப்பே ருருவமாய் நிமிர்ந்த *

குறிய மாண் எம்மான் குரைகடல் கடைந்த கோலமா ணிக்கமென் எம்மான் *

செறிகுலை வாழை கமுகுதெங் கணிசூழ் திருச்செங்குன் றூர்த்திருச் சிற்றாறு

அறிய * மெய்ம் மையே நின்றவெம் பெருமான் அடியிணை யல்லதோர் அரணே


5   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 8.4.5

அல்லதோர் அரணும் அவனில்வே றில்லை அதுபொரு ளாகிலும் * அவனை

அல்லதென் ஆவி அமர்ந்தணை கில்லா தாதலால் அவனு றை கின்ற *

நல்லநான் மறையோர் வேள்வியுள் மடுத்த நறும்புகை விசும்பொளி மறைக்கும் *

நல்லநீள் மாடத் திருச்செங்குன் றூரில் திருச்சிற்றா றெனக்குநல் லரணே


6   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 8.4.6

எனக்குநல் லரணை எனதா ருயிரை இமையவர் தந்தைதாய் தன்னை *

தனக்குன்தன் தன்மை அறிவரி யானைத் தடங்கடல் பள்ளியம் மானை *

மனக்கொள்சீர் மூவா யிரவர்வண் சிவனும் அயனும் தானுமொப் பார்வாழ் *

கனக்கொள்திண் மாடத் திருச்செங்குன் றூரில் திருச்சிற்றா றதனுள்கண் டேனே


7   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 8.4.7

திருச்செங்குன் றூரில் திருச்சிற்றா றதனுள் கண்டவத் திருவடி யென்றும் *

திருச்செய்ய கமலக் கண்ணூம்செவ் வாயும் செவ்வடி யும்செய்ய கையும் *

திருச்செய்ய கமல வுந்தியும் செய்ய கமலமார் பும்செய்ய வுடையும் *

திருச்செய்ய முடியும் ஆரமும் படையும் திகழவென் சிந்தையு ளானே


8   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 8.4.8

திகழவென் சிந்தை யுள்ளிருந் தானைச் செழுநிலத் தேவர்நான் மறையோர் *

திசைகைகூப்பி யேத்தும் திருச்செங்குன் றூரில் திருச்சிற்றா றங்கரை யானை *

புகர்கொள்வா னவர்கள் புகலிடந் தன்னை அசுரர்வன் கையர்வெங் கூற்றை *

புகழுமா றறியேன் பொருந்துமூ வுலகும் படைப்பொடு கெடுப்புக்காப் பவனே


9   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 8.4.9

படைப்பொடு கெடுப்புக் காப்பவன் பிரம பரம்பரன் சிவபெருமான் அவனே *

இடைப்புக்கோ ருருவும் ஒழிவில்லை யவனே புகழ்வில்லை யாவையும் தானே *

கொடைப்பெரும் புகழார் இனையர்தன் னானார் கூறிய விச்சையோ டொழுக்கம் *

நடைப்பலி யியற்கைத் திருச்செங்குன் றூரில் திருச்சிற்றா றமர்ந்த நாதனே


10   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 8.4.10

அமர்ந்த நாதனை யவரவ ராகி அவர்க்கருள் அருளுமம் மானை *

அமர்ந்ததண் பழனத் திருச்செங்குன் றூரில் திருச்சிற்றாற் றங்கரை யானை *

அமர்ந்தசீர் மூவா யிரவர்வே தியர்கள் தம்பதி யவனிதே வர்வாழ்வு *

அமர்ந்தமா யோனை முக்கணம் மானை நான்முக னையமர்ந் தேனே


11   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 8.4.11

** தேனைநன் பாலைக் கன்னலை யமுதைத் திருந்துல குண்டவம் மானை *

வானநான் முகனை மலர்ந்தண் கொப்பூழ் மலர்மிசைப் படைத்தமா யோனை *

கோனைவண் குருகூர்ச் வண்சட கோபன் சொன்னவா யிரத்துளிப் பத்தும் *

வானின்மீ தேற்றி யருள்செய்து முடிக்கும் பிறவிமா மாயக்கூத் தினையே