083-Thiruananthapuram


Thiruananthapuram ( Trivandrum – Sri Anantha Padmanabhaswamy Temple )

Azhwar Paasuram Count
நம்மாழ்வார் திருவாய்மொழி 11
Total 11

1   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 10.2.1

** கெடுமிட ராயவெல்லாம் கேசவா வெள்ள * நாளும்

கொடுவினை செய்யும்கூற்றின் தமர்களும் குறுககில்லார் *

விடமுடை யரவில்பள்ளி விரும்பினான் சுரும்பலற்றும் *

தடமுடை வயல் அனந்தபுரநகரிப் புகுதுமின்றே


2   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 10.2.2

இன்றுபோய்ப் புகுதிராகி லெழு மையும் ஏதம்சார *

குன்றுனேர் மாடமாடே குருந்துசேர் செருந்திபுன்னை *

மன்றலர் போழில் அனந்தபுரநகர் மாயன்நாமம் *

ஒன்றுமோ ராயிரமாம் உள்ளுவார்க் கும்பரூரே


3   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 10.2.3

ஊரும்புட் கொடியுமஃதே யுலகொல்லாமுண்டுமிழ்ந்தான் *

சேரும்தண் ணனந்தபுரம் சிக்கெனப் புகுதிராகில் *

தீரும்நோய்வினைகளெல்லாம் திண்ணநாம் அறியச்சொன்னோம் *

பேரும் ஓராயிரத்துள் ஒன்றுநீர் பேசுமினே


4   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 10.2.4

பேசுமின் கூசமின்றிப் பெரியநீர் வேலைசூழ்ந்து *

வாசமே கமழுஞ்சோலை வயலணி யனந்தபுரம் *

நேசம்செய் துறைகின்றானை நெறிமையால் மலர்கள்தூவி *

பூசனை செய்கின்றார்கள் புண்ணியம் செய்தவாறே


5   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 10.2.5

புண்ணியம் செய்துநல்ல புனலொடு மலர்கள்தூவி *

எண்ணுமி னெந்தைநாமம் இப்பிறப் பறுக்குமப்பால் *

திண்ணம்நாம் அறியச்சொன்னோம் செறிபொழில் அனந்தபுரத்து *

அண்ணலார் கமலபாதம் அணுகுவார் அமரராவார்


6   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 10.2.6

அமரராய்த் திரிகின்றார்கட்கு ஆதிசேர அனந்தபுரத்து *

அமரர்கோன் அர்ச்சிக்கின்றங் ககப்பணி செய்வர்விண்ணோர் *

நமர்களோ! சொல்லக்கேண்மின் நாமும்போய் நணுகவேண்டும் *

குமரனார் தாதைதுன்பம் துடைத்தகோ விந்தனாரே


7   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 10.2.7

துடைத்தகோ விந்தனாரே யுலகுயிர் தேவும்மற்றும் *

படைத்தவெம் பரமமூர்த்தி பாம்பணைப் பள்ளிகொண்டான் *

மடைத்தலை வாளைபாயும் வயல ணியனந்தபுரம் *

கடைத்தலை சீய்க்கப்பெற்றால் கடுவினை களையலாமே


8   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 10.2.8

கடுவினை களையலாகும் காமனைப் பயந்தகாளை *

இடவகை கொண்டதென்பர் எழிலணி யனந்தபுரம் *

படமுடை யரவில்பள்ளி பயின்றவன் பாதம்காண *

நடமினோ நமர்களுள்ளீர் நாமுமக் கறியச்சொன்னோம்


9   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 10.2.9

நாமுமக் கறியச்சொன்ன நாள்களும் நணியவான *

சேமம் நங்குடைத்துக்கண்டீர் செறிபொழிலனந்தபுரம் *

தூமநல் விரைமலர்கள் துவளற ஆய்ந்துகொண்டு *

வாமனன் அடிக்கென்றெத்த மாய்ந்தறும் வினைகள்தாமே


10   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 10.2.10

மாய்ந்தறும் வினைகள்தாமே மாதவா என்ன நாளும் *

ஏய்ந்தபொன் மதிளனந்தபுர நகரெந்தைக்கென்று *

சாந்தொடு விளக்கம்தூபம் தாமரை மலர்கள்நல்ல *

ஆய்ந்துகொண் டேத்தவல்லார் அந்தமில் புகழினாரே


11   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 10.2.11

** அந்தமில் புகழனந்தபுர நகர் ஆதிதன்னை *

கொந்தலர் பொழில்குருகூர் மாறன் சொல் லாயிரத்துள் *

ஐந்தினோ டைந்தும்வல்லார் அணைவர்போய் அமருலகில் *

பைந்தொடி மடந்தையர்தம் வேய்மரு தோளிணையே