055-ThiruparameshwaraVinnagaram


Thiruparameshwara Vinnagaram ( Sri Vaikunda Perumal Temple )

Azhwar Paasuram Count
திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி 10
Total 10

1   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 2.9.1

** சொல்லுவன் சொற்பொருள் தானவையாய்ச் சுவை யூறொலி நாற்றமும் தோற்றமுமாய் *

நல்லரன் நான்முகன் நாரண னுக்கிடந் தான்தடஞ் சூழ்ந்தழ காயகச்சி *

பல்லவன் வில்லவ னென்றுலகில் பல ராய்ப்பல வேந்தர் வணங்குகழற்

பல்லவன் * மல்லையர் கோன்பணிநத பர மேச்சுர விண்ணக ரமதுவே


2   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 2.9.2

கார்மன்னு நீள்விசும் பும்கட லும்சுடரும் நில னும்மலை யும் * தன்னுந்தித்

தார்மன்னு தாமரைக் கண்ணனிடம் தட மாமதிள் சூழ்ந்தழ காயகச்சி *

தேர்மன்னு தென்னவ னைமுனையில் செரு வில்திறல் வாட்டிய திண்சிலையோன் *

பார்மன்னு பல்லவர் கோன்பணிந்த பரமேச்சுர விண்ணக ரமதுவே


3   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 2.9.3

உரந்தரு மெல்லணைப் பள்ளி கொண்டான் ஒருகால் முன்னம் மாவுரு வாய்க்கடலுள் *

வரந்தரும் மாமணி வண்ணனிடம் மணிமா டங்கள் சூழ்ந்தழ காயகச்சி *

நிரந்தவர் மண்ணையில் புண்ணுகர் வேல்நெடு வாயி லுகச்செரு வில்முனநாள் *

பரந்தவன் பல்லவர் கோன்பணிந் தபர மேச்சுர விண்ணக ரமதுவே


4   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 2.9.4

அண்டமு மெண்டிசை யும்நிலனும் அலைநீரொடு வானெரி கால்முதலா

உண்டவன் * எந்தைபி ரானதி டமொளி மாடங்கள் சூந்தழ காயகச்சி *

விண்டவ ரிண்டைக்கு ழாமுடனே விரைந் தாரிரி யச்செரு வில்முனைந்து *

பண்டொரு கால்வளைத் தான்பணிந் தபர மேச்சுர விண்ணக ரமதுவே


5   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 2.9.5

தூம்புடைத் திண்கைவன் தாள்களிற்றின் துயர் தீர்த்தர வம்வெருவ * முனநாள்

பூம்புனல் பொய்கைபுக் கானவ னுக்கிடந் தான்தடஞ் சூழ்ந்தழ காயகச்சி *

தேம்பொழில் குன்றெயில் தென்னவனைத் திசைப் பச்செரு மேல்வியந் தன்றுசென்ற *

பாம்புடைப் பல்லவர் கோன்பணிந்த பரமேச்சுர விண்ணக ரமதுவே


6   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 2.9.6

திண்படைக் கோளரி யினுரு வாய்த் திறலோனக லம்செரு வில்முனநாள் *

புண்படப் போழ்ந்த பிரானதிடம் பொரு மாடங்கள் சூழ்ந்தழ காயகச்சி *

வெண்குடை நீழல்செங் கோல்நடப் பவிடை வெல்கொடி வேற்படை முன்னுயர்த்த *

பண்புடைப் பல்லவர் கோன்பணிந்த பரமேச்சுர விண்ணக ரமதுவே


7   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 2.9.7

இலகிய நீண்முடி மாவலி தன்பெரு வேள்வியில் மாணுரு வாய்முனநாள் *

சலமொடு மாநிலங் கொண்டவ னுக்கிடந் தான்தடஞ் சூழ்ந்தழ காயகச்சி *

உலகுடை மன்னவன் தென்னவனைக் கன்னி மாமதிள் சூழ்கரு வூர்வெருவ *

பலபடை சாயவென் றான்பணிந் தபர மேச்சுர விண்ணக ரமதுவே


8   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 2.9.8

குடைத்திறல் மன்னவ னாயொருகால் குரங் கைப்படை யா * மலை யால்கடலை

அடைத்தவ னெந்தைபி ரானதி டம்மணி மாடங்கள் சூழ்ந்தழ காயகச்சி *

விடைத்திறல் வில்லவன் நென்மெலியில் வெருவச்செரு வேல்வலங் கைப்பிடித்த *

படைத்திறல் பல்லவர் கோன்பணிந்த பரமேச்சுர விண்ணக ரமதுவே


9   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 2.9.9

பிறையுடை வாணுதல் பின்னை திறத்து முன்னொரு கால்செரு வில்லுருமின் *

மறையுடை மால்விடை யேழடர்த்தாற் கிடந் தான்தடஞ் சூழ்ந்தழ காயகச்சி *

கறையுடை வாள்மற மன்னர்க்கெடக் கடல் போல முழங்கும் குரல்கடுவாய் *

பறையுடைப் பல்லவர் கோன்பணிந்த பரமேச்சுர விண்ணக ரமதுவே


10   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 2.9.10

** பார்மன்னு தொல்புகழ்ப் பல்லவர்கோன் பணிந் தபர மேச்சுர விண்ணகர்மேல் *

கார்மன்னு நீள்வயல் மங்கையர் தந்தலை வன்கலி கன்றிகுன் றாதுரைத்த *

சீர்மன்னு செந்தமிழ் மாலைவல்லார்த் திரு மாமகள் தன்னரு ளால் * உலகில்

தேர்மன்ன ராயொலி மாகடல்சூழ் செழு நீருல காண்டு திகழ்வர்களே