046-ThiruKadalmalai


Thiru Kadalmalai ( Sri Sthala Sayana Perumal Temple )

Azhwar Paasuram Count
திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி 22
திருமங்கையாழ்வார் திருக்குறுந்தாண்டகம் 1
திருமங்கையாழ்வார் திருநெடுந்தாண்டகம் 1
திருமங்கையாழ்வார் சிறிய திருமடல் 1
திருமங்கையாழ்வார் பெரிய திருமடல் 1
பூதத்தாழ்வார் இரண்டாம் திருவந்தாதி 1
Total 27

1   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 2.5.1

** பாராய துண்டுமிழ்ந்த பவளத்தூணைப் பாடுகடலி லமுதத்தைப் பரிவாய்கீண்ட

சீரானை * எம்மானைத் தொண்டர்தங்கள் சிந்தையுள்ளே முளைத்தெழுந்த தீங்கரும்பினை *

போரானைக் கொம்பொசித்த போரேற்றினைப் புணர்மருத மிறநடந்த பொற்குன்றினை *

காரானை யிடர்க்கடிந்த கற்பகத்தைக் கண்டதுநான் கடல்மல்லைத் தலசயனத்தே


2   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 2.5.2

பூண்டவத்தம் பிறர்க்கடைந்து தொண்டுபட்டுப் பொய்ந்நூலை மெய்ந்நூலென் றென்றுமோதி

மாண்டு * அவத்தம் போகாதே வம்மினெந்தை என்வணங்கப் படுவானை * கணங்களேத்தும்

நீண்டவத்தைக் கருமுகிலை எம்மான்தன்னை நின்றவூர் நித்திலத்தைத் தொத்தார்சோலை *

காண்டவத்தைக் கனலெரிவாய்ப் பெய்வித்தானைக் கண்டதுநான் கடல்மல்லைத் தலசயனத்தே


3   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 2.5.3

உடம்புருவில் மூன்றொறாய் மூர்த்திவேறாய் உலகுய்ய நின்றானை * அன்றுபேய்ச்சி

விடம்பருகு வித்தகனைக் கன்றுமேய்த்து விளையாட வல்லானை வரைமீகானில் *

தடம்பருகு கருமுகிலைத் தஞ்சைக்கோயில் தவநெறிக்கோர் பெருநெறியை வையங்காக்கும் *

கடும்பரிமேல் கற்கியைநான்கண்டுகொண்டேன் கடிபொழில்சூழ் கடன்மல்லைத் தலசயனத்தே


4   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 2.5.4

பேய்த்தாயை முலையுண்ட பிள்ளைதன்னைப் பிணைமருப்பில் கருங்களிற்றைப்  பிணைமான்னோக்கின் *

ஆய்த்தாயர் தயிர்வெண்ணெ யமர்ந்தகோவை அந்தணர்தம் அமுதத்தைக் குரவைமுன்னே

கோத்தானை * குடமாடு கூத்தன்றன்னைக் கோகுலங்கள் தளராமல் குன்றமேந்திக்

காத்தானை * எம்மானைக் கண்டுகொண்டேன் கடிபொழில்சூழ் கடல்மல்லைத் தலசயனத்தே


5   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 2.5.5

பாய்ந்தானைத் திரிசகடம் பாறிவீழப் பாலகனா யாலிலையில் பள்ளியின்பம்

ஏய்ந்தானை * இலங்கொளிசேர் மணிக்குன்றன்ன ஈரிரண்டு மால்வரைத்தோ ளெம்மான்றன்னை *

தோய்ந்தானை நிலமகள்தோள் தூதிற்சென்றப் பொய்யறைவாய்ப் புகப்பெய்த மல்லர்மங்கக்

காய்ந்தானை * எம்மானைக் கண்டுகொண்டேன் கடிபொழில்சூழ் கடல்மல்லைத் தலசயனத்தே


6   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 2.5.6

கிடந்தானைத் தடங்கடலுள் பணங்கள்மேவிக் கிளர்ப்பொறிய மறிதிரிய வதனின்பின்னே

படர்ந்தானைப் * படுமதத்த களிற்றின்கொம்பு பறித்தானைப் பாரிடத்தை எயிறுகீற

இடந்தானை * வளைமருப்பி னேனமாகி இருநிலனும் பெருவிசும்பு மெய்தாவண்ணம்

கடந்தானை * எம்மானைக் கண்டுகொண்டேன் கடிபொழில்சூழ் கடல்மல்லைத் தலசயனத்தே


7   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 2.5.7

பேணாத வலியரக்கர் மெலியவன்று பெருவரைத்தோ ளிறநெரித்தன் றவுணர்க்கோனை *

பூணாகம் பிளவெடுத்த போர்வல்லோனைப் பொருகடலுள் துயிலமர்ந்த புள்ளூர்தியை *

ஊணாகப் பேய்முலைநஞ் சுண்டான் தன்னை உள்ளுவா ருள்ளத்தே யுறைகின்றானை *

காணாது திரிதருவேன் கண்டுகொண்டேன் கடிபொழில்சூழ் கடன்மல்லைத் தலசயனத்தே


8   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 2.5.8

பெண்ணாகி யின்னமுதம் வஞ்சித்தானைப் பிறையெயிற்றன் றடலரியாய்ப் பெருகினானை *

தண்ணார்ந்த வார்ப்புனல்சூழ் மெய்யமென்னும் தடவரைமேல் கிடந்தானைப் பணங்கள்மேவி *

என்ணானை யெண்ணிறந்த புகழினானை இலங்கொளிசே ரரவிந்தம் போன்றுநீண்ட

கண்ணானை * கண்ணாரக் கண்டுகொண்டேன் கடிபொழில்சூழ் கடல்மல்லைத் தலசயனத்தே


9   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 2.5.9

தொண்டாயர் தாம்பரவு மடியினானைப் படிகடந்த தாளாளற் காளாயுய்தல்

விண்டானை * தென்னிலங்கை யரக்கர்வேந்தை விலங்குண்ண வலங்கைவாய்ச் சரங்களாண்டு *

பண்டாய வேதங்கள் நான்கும்ஐந்து வேள்விகளும் கேள்வியோ டங்கமாறும் கண்டானை *

தொண்டனேன் கண்டுகொண்டேன் கடிபொழில்சூழ் கடல்மல்லைத் தலசயனத்தே


10   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 2.5.10

** படநாகத் தணைக்கிடந்தன் றவுணர்கோனைப் படவெகுண்டு மருதிடைப்போய்ப் பழனவேலி *

தடமார்ந்த கடல்மல்லைத் தலசயனத்துத் தாமரைக்கண் துயிலமர்ந்த தலைவன்தன்னை *

கடமாரும் கருங்களிறு வல்லான்வெல்போர்க் கலிகன்றி யொலிசெய்த இன்பப்பாடல் *

திடமாக விவையைந்து மைந்தும்வல்லார் தீவினையை முதலரிய வல்லார்தாமெ


11   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 2.6.1

** நண்ணாத வாளவுண ரிடைப்புக்கு * வானவரைப்

பெண்ணாகி யமுதூட்டும் பெருமானார் * மருவினிய

தண்ணார்ந்த கடன்மல்லைத் தலசயனத் துறைவாரை *

எண்ணாதே யிருப்பாரை யிறைப்பொழுது மெண்ணோமே


12   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 2.6.2

பார்வண்ண மடமங்கை பனிநன்மா மலர்க்கிழத்தி *

நீர்வண்ணன் மார்வகத்தி லிருக்கையைமுன் நினைந்தவனூர் *

கார்வண்ண முதுமுந்நீர்க் கடல்மல்லைத் தலசயனம் *

ஆரெண்ணும் நெஞ்சுடையா ரவரெம்மை யாள்வாரே


13   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 2.6.3

ஏனத்தி னுருவாகி நிலமங்கை யெழில்கொண்டான் *

வானத்தி லவர்முறையால் மகிழ்ந்தேத்தி வலங்கொள்ள *

கானத்தின் கடல்மல்லைத் தலசயனத் துறைகின்ற *

ஞானத்தி னொளியுருவை நினைவாரென் நாயகரே


14   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 2.6.4

விண்டாரை வென்றாவி விலங்குண்ண * மெல்லியலார்

கொண்டாடும் மல்லகலம் அழலேற வெஞ்சமத்துக்

கண்டாரை * கடல்மல்லைத் தலசயனத் துறைவாரை *

கொண்டாடும் நெஞ்சுடையா ரவரெங்கள் குலதெய்வமே


15   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 2.6.5

பிச்சச் சிறுபீலிச் சமண்குண்டர் முதலாயோர் *

விச்சைக் கிறையென்னு மவ்விறையைப் பணியாதே *

கச்சிக் கிடந்தவனூர் கடன்மல்லைத் தலசயனம் *

நச்சித் தொழுவாரை நச்சென்றன் நன்னெஞ்சே


16   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 2.6.6

புலன்கொள்நிதிக் குவையோடு புழைக்கைமா களிற்றினமும் *

நலங்கொள்நவ மணிக்குவையும் சுமந்தெக்கும் நான்றொசிந்து *

கலங்களியங் கும்மல்லைக் கடல்மல்லைத் தலசயனம் *

வலங்கொள்மனத் தாரவரை வலங்கொள்ளென் மடநெஞ்சே


17   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 2.6.7

பஞ்சிச் சிறுகூழை யுருவாகி * மருவாத

வஞ்சப்பெண் நஞ்சுண்ட அண்ணல்முன் நண்ணாத *

கஞ்சைக் கடந்தவனூர் கடன்மல்லைத் தலசயனம் *

நெஞ்சில் தொழுவாரைத் தொழுவாயென் தூய்நெஞ்சே


18   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 2.6.8

செழுநீர் மலர்க்கமலம் திரையுந்த வன்பகட்டால் *

உழுநீர் வயலுழவ ருழப்பின்முன் பிழைத்தெழுந்த *

கழுநீர் கடிகமழும் கடன்மல்லைத் தலசயனம் *

தொழுநீர் மனத்தவரைத் தொழுவாயென் தூயநெஞ்சே


19   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 2.6.9

பிணங்களிடு காடதனுள் நடமாடு பிஞ்ஞகனோடு *

இணங்குதிருச் சக்கரத்தெம் பெருமானார்க் கிடம் * விசும்பில்

கணங்களியங் கும்மல்லைக் கடன்மல்லைத் தலசயனம் *

வணங்குமனத் தாரவரை வணங்கென்றன் மடநெஞ்சே


20   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 2.6.10

** கடிகமழு நெடுமறுகில் கடல்மல்லைத் தலசயனத்து *

அடிகளடி யேநினையு மடியவர்கள் தம்மடியான் *

வடிகொள்நெடு வேல்வலவன் கலிகன்றி யொலிவல்லார் *

முடிகொள்நெடு மன்னவர்தம் முதல்வர்முத லாவாரே


21   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 3.5.8

சங்கு தங்கு தடங்கடல் கடன்மல்லை யுள்கிடந்தாய் * அருள்புரிந்து

இங்கென்னுள் புகுந்தா யினிப்போயி நாலறையோ *

கொங்கு செண்பக மல்லிகை மலர்ப்புல்கி இன்னிள வண்டு போய் * இளம்

தெங்கின் தாதளையும் திருவாலி யம்மானே


22   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 7.1.4

புள்வாய் பிளந்த புனிதா என் றழைக்க *

உள்ளேநின் றென்னுள்ளங் குளிரு மொருவா *

கள்வா கடன்மல்லைக் கிடந்த கரும்பே *

வள்ளால் உன்னை யெங்ஙனம்நான் மறக்கேனே


23   திருமங்கையாழ்வார் – திருக்குறுந்தாண்டகம் – 19

** பிண்டியார் மண்டை ஏந்திப் பிறர்மனை திரிதந் துண்ணும்

உண்டியான் * சாபம் தீர்த்த ஒருவனூர் * உலக மேத்தும்

கண்டியூர் அரங்கம் மெய்யம் கச்சிபேர் மல்லை என்று

மண்டினார் * உய்யல் அல்லால் மற்றையார்க் குய்ய லாமே


24   திருமங்கையாழ்வார் – திருநெடுந்தாண்டகம் – 9

வங்கத்தால் மாமணிவந் துந்து முந்நீர் மல்லையாய்மதிள்கச்சி யூராய் பேராய் *

கொங்கத்தார் வளங்கொன்றை யலங்கல் மார்வன் குலவரையன் மடப்பாவை யிடப்பால் கொண்டான்

பங்கத்தாய் * பாற்கடலாய் பாரின் மேலாய் பனிவரையி னுச்சியாய் பவள வண்ணா *

எங்குற்றாய் எம்பெருமான் உன்னை நாடி ஏழையேன் இங்கனமே ஊழிதரு கேனே


25   திருமங்கையாழ்வார் – சிறிய திருமடல் – 73

காரார்க் குடந்தை கடிகை கடல்மல்லை *

ஏரார் பொழில் சூழ் இடவந்தை நீர்மலை


26   திருமங்கையாழ்வார் – பெரிய திருமடல் – 120

மன்னும் கடன்மல்லை மாயவனை * வானவர்தம் 

சென்னி மணிச்சுடரைத் தண்கால் திறல்வலியை


27   பூதத்தாழ்வார் – இரண்டாம் திருவந்தாதி – 70

தமருள்ளம் தஞ்சை தலையரங்கம் தண்கால் *

தமருள்ளும் தண்பொருப்பு வேலை * தமருள்ளும்

மாமல்லை கோவல் மதிட்குடந்தை யென்பரே *

ஏவல்ல எந்தைக் கிடம்