008-ThiruThanjaimaamani


Thiru Thanjaimaamani Koil ( Sri Neelamega Perumal Temple )

Azhwar Paasuram Count Video Audio
திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி
3

பூதத்தாழ்வார் இரண்டாம் திருவந்தாதி
1

நம்மாழ்வார் திருவாய்மொழி
1

Total
5

1   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 1.1.6

** எம்பிரான் எந்தை என்னுடைச் சுற்றம் எனக்கு அரசு என்னுடை வாழ்நாள் *

அம்பினல் அரக்கர் வெருக்கொள நெருக்கி அவர் உயிர் செகுத்த எம் அண்ணல் *

வம்பு உலாம் சோலை மா மதிள் தஞ்சை மாமணிக்கோயிலே வணங்கி *

நம்பிகாள்! உண்ண நான் கண்டுகொண்டேன்- நாராயணா என்னும் நாமம்

  

 

  

 

  


2   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 2.5.3

உடம்புருவில் மூன்றொறாய் மூர்த்திவேறாய் உலகுய்ய நின்றானை * அன்றுபேய்ச்சி

விடம்பருகு வித்தகனைக் கன்றுமேய்த்து விளையாட வல்லானை வரைமீகானில் *

தடம்பருகு கருமுகிலைத் தஞ்சைக்கோயில் தவநெறிக்கோர் பெருநெறியை வையங்காக்கும் *

கடும்பரிமேல் கற்கியைநான்கண்டுகொண்டேன் கடிபொழில்சூழ் கடன்மல்லைத் தலசயனத்தே

  

 

  

 

  


3   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 7.3.9

என்செய் கேனடி னேனுரை யீர்இதற் கென்று மென்மனத் தேயிருக் கும்புகழ் *

தஞ்சை யாளியைப் பொன்பெய ரோன்றன் நெஞ்ச மன்றிடந் தவனைத்தழ லேபுரை *

மிஞ்செய் வாளரக் கன்நகர் பாழ்படச் சூழ்க டல்சிறை வைத்து இமை யோர்தொழும் *

பொன்செய் மால்வரை யைமணிக் குன்றினை அன்றி யென்மனம் போற்றியென் னாதே

  

 

  

 

  


4   பூதத்தாழ்வார் – இரண்டாம் திருவந்தாதி – 70

தமருள்ளம் தஞ்சை தலையரங்கம் தண்கால் *

தமருள்ளும் தண்பொருப்பு வேலை * தமருள்ளும்

மாமல்லை கோவல் மதிட்குடந்தை யென்பரே *

ஏவல்ல எந்தைக் கிடம்

  

 

  

 

  


5   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 5.3.1

** மாசறு சோதியென் செய்ய வாய்மணிக் குன்றத்தை *

ஆசறு சீலனை யாதி மூர்த்தியை நாடியே *

பாசற வெய்தி யறிவிழந் தெனைநா ளையம் *

ஏசறு மூரவர் கவ்வை தோழீ என்செய்யுமே