004-Thiruvellarai


Thiruvellarai ( Sri Pundarikashan Perumal Temple )

Azhwar Paasuram Count Video Audio
பெரியாழ்வார் பெரியாழ்வார் திருமொழி
11

திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி
11

திருமங்கையாழ்வார் சிறிய திருமடல்
1

திருமங்கையாழ்வார் பெரிய திருமடல்
1

Total
24

1   பெரியாழ்வார் – பெரியாழ்வார் திருமொழி – 1.5.8

** உன்னையும் ஒக்கலையில் கொண்டு தமில்மருவி உன்னொடு தங்கள்கருத்தாயின செய்துவரும் *

கன்னிய ரும்மகிழக் கண்டவர் கண்குளிரக் கற்றவர் தெற்றிவரப் பெற்ற எனக்குஅருளி *

மன்னு குறுங்குடியாய் வெள்ளறை யாய் மதிள்சூழ் சோலை மலைக்கரசே கண்ண புரத்தமுதே *

என்னவலம் களைவாய் ஆடுக செங்கீரை ஏழுலகும் முடையாய் ஆடுக ஆடுகவே

  

 

  

 

  


2   பெரியாழ்வார் – பெரியாழ்வார் திருமொழி – 2.8.1

** இந்திர னோடு பிரமன் ஈசன் இமையவ ரெல்லாம் *

மந்திர மாமலர் கொண்டு மறைந்துஉவ ராய்வந்து நின்றார் *

சந்திரன் மாளிகை சேரும் சதிரர்கள் வெள்ளறை நின்றாய் *

அந்தியம் போதுஇது வாகும் அழகனே காப்பிட வாராய்

  

 

  

 

  


3   பெரியாழ்வார் – பெரியாழ்வார் திருமொழி – 2.8.2

கன்றுகள் இல்லம் புகுந்து கதறுகின் றபசு வெல்லாம் *

நின்றொழிந் தேன்உன்னைக் கூவி நேசமே லொன்று மிலாதாய் *

மன்றில்நில் லேல்அந்திப் போதுமதிள் திரு வெள்ளறை நின்றாய் *

நன்றுகண் டாய்என்தன் சொல்லுநான் உன்னைக் காப்பிட வாராய்

  

 

  

 

  


4   பெரியாழ்வார் – பெரியாழ்வார் திருமொழி – 2.8.3

செப்போது மென்முலை யார்கள் சிறுசோறும் இல்லும் சிதைத்திட்டு *

அப்போது நானுரப் பப்போய் அடிசிலு முண்டிலை ஆள்வாய் *

முப்போதும் வானவ ரேத்தும் முனிவர்கள் வெள்ளறை நின்றாய் *

இப்போது நான்ஒன்றும் செய்யேன் எம்பிரான் காப்பிட வாராய்

  

 

  

 

  


5   பெரியாழ்வார் – பெரியாழ்வார் திருமொழி – 2.8.4

கண்ணில் மணல்கொடு தூவிக் காலினால் பாய்ந்தனை யென்றென்று *

எண்ணரும் பிள்ளைகள் வந்திட்டு இவரால் முறைப்படு கின்றார் *

கண்ணனே வெள்ளறை நின்றாய் கண்டாரோ டேதீமை செய்வாய் *

வண்ணமே வேலைய தொப்பாய் வள்ளலே காப்பிட வாராய்

  

 

  

 

  


6   பெரியாழ்வார் – பெரியாழ்வார் திருமொழி – 2.8.5

பல்லா யிரவர்இவ் வூரில் பிள்ளைகள் தீமைகள் செய்வார் *

எல்லாம்உன் மேலன்றிப் போகாது எம்பிரான் நீஇங்கே வாராய் *

நல்லார்கள் வெள்ளறை நின்றாய் ஞானச் சுடரே உன்மேனி *

சொல்லார வாழ்த்தி நின்றேத்திச் சொப்படக் காப்பிட வாராய்

  

 

  

 

  


7   பெரியாழ்வார் – பெரியாழ்வார் திருமொழி – 2.8.6

கஞ்சங் கறுக்கொண்டு நின்மேல்  கருநிறச் செம்மயிர்ப் பேயை *

வஞ்சிப் பதற்கு விடுத்தா னென்பதுஓர் வார்த்தையும்

உண்டு * மஞ்சு தவழ்மணி மாட மதிள்திரு வெள்ளறை நின்றாய் *

அஞ்சுவன் நீஅங்குநிற்க அழகனே காப்பிட வாராய்

  

 

  

 

  


8   பெரியாழ்வார் – பெரியாழ்வார் திருமொழி – 2.8.7

கள்ளச் சகடும் மருதும் கலக்கழி யஉதை செய்த *

பிள்ளை யரசேநீ பேயைப் பிடித்து முலையுண்ட பின்னை *

உள்ளவாறு ஒன்றும் அறியேன் ஒளியுடை வெள்ளறை நின்றாய் *

பள்ளிகொள் போது இதுவாகும் பரமனே காப்பிட வாராய்

  

 

  

 

  


9   பெரியாழ்வார் – பெரியாழ்வார் திருமொழி – 2.8.8

இன்ப மதனை உயர்த்தாய் இமையவர்க்கு என்றும் அரியாய் *

கும்பக் களிறட்ட கோவே கொடுங்கஞ்சன் நெஞ்சினிற் கூற்றே *

செம்பொன்மதிள்வெள் ளறையாய் செல்வத்தி னால்வளர் பிள்ளாய் *

கம்பக் கபாலிகாண் அங்குக் கடிதோடிக் காப்பிட வாராய்

  

 

  

 

  


10   பெரியாழ்வார் – பெரியாழ்வார் திருமொழி – 2.8.9

இருக்கொடு நீர்சங்கில் கொண்டிட்டு எழில்மறை யோர்வந்து நின்றார் *

தருக்கேல்நம்பி சந்தி நின்று தாய்சொல்லுக் கொள்ளாய் சிலநாள் *

திருக்காப்பு நான்உன்னைச் சாத்தத் தேசுடை வெள்ளறை நின்றாய் *

உருக்காட்டும் அந்தி விளக்குஇன் றொளிகொள்ள ஏற்றுகேன் வாராய்

  

 

  

 

  


11   பெரியாழ்வார் – பெரியாழ்வார் திருமொழி – 2.8.10

** போதமர் செல்வக் கொழுந்து புணர்திரு வெள்ளறை யானை *

மாதர்க் குயர்ந்த அசோதை மகன்தன்னைக் காப்பிட்ட மாற்றம் *

வேதப் பயன்கொள்ள வல்ல விட்டுசித் தன்சொன்ன மாலை *

பாதப் பயன்கொள்ள வல்ல பத்தருள் ளார்வினை போமே

  

 

  

 

  


12   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 5.3.1

** வென்றி மாமழு வேந்திமுன் மண்மிசை மன்னரை மூவெழுகால்

கொன்ற தேவ * நின் குரைகழல் தொழுவதோர் வகையெனக் கருள்புரியே *

மன்றில் மாம்பொழில் நுழைதந்து மல்லிகை மௌவலின் போதலர்த்தி *

தென்றல் மாமணம் கமழ்தர வருதிரு வெள்ளறை நின்றானே

  

 

  

 

  


13   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 5.3.2

வசையில் நான்மறை கெடுத்தவம் மலரயற் கருளி முன் பரிமுகமாய் *

இசைகொள் வேதநூ லென்றிவை பயந்தவ னே எனக் கருள்புரியே *

உயர்கொள் மாதவிப் போதொடு லாவிய மாருதம் வீதியின்வாய் *

திசையெல் லாம்கம ழும்பொழில் சூழ்திரு வெள்ளறை நின்றானே

  

 

  

 

  


14   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 5.3.3

வெய்ய னாயுல கேழுடன் நலிந்தவன் உடலக மிருபிளவா *

கையில் நீளுகிர்ப் படையது வாய்த்தவ னே எனக் கருள்புரியே *

மையி னார்தரு வராலினம் பாயவண் தடத்திடைக் கமலங்கள் *

தெய்வ நாறுமொண் பொய்கைகள் சூழ்திரு வெள்ளறை நின்றானே

  

 

  

 

  


15   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 5.3.4

வாம்ப ரியுக மன்னர்த முயிர்செக ஐவர்க்கட் கரசளித்த *

காம்பி னார்த்திரு வேங்கடப் பொருப்பநின் காதலை யருளெனக்கு *

மாம்பொ ழில்தளிர் கோதிய மடக்குயில் வாயது துவர்ப்பெய்த *

தீம்ப லங்கனித் தேனது நுகர்திரு வெள்ளறை நின்றானே

  

 

  

 

  


16   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 5.3.5

மான வேலொண்கண் மடவரல் மண்மகள் அழுங்கமுந் நீர்ப்பரப்பில் *

ஏன மாகியன் றிருநில மிடந்தவ னேஎனக் கருள்புரியே *

கான மாமுல்லை கழைக்கரும் பேறிவெண் முறுவல்செய் தலர்கின்ற *

தேனின் வாய்மலர் முருகுகுக் கும்திரு வெள்ளறை நின்றானே

  

 

  

 

  


17   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 5.3.6

பொங்கு நீண்முடி யமரர்கள் தொழுதெழ அமுதினைக் கொடுத்தளிப்பான் *

அங்கொ ராமைய தாகிய வாதிநின் அடிமை யையரு ளெனக்கு *

தங்கு பேடையொ டூடிய மதுகரம் தையலார் குழல ணைவான் *

திங்கள் தோய்சென்னி மாடம்சென்றணை திருவெள்ளறை நின்றானே

  

 

  

 

  


18   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 5.3.7

ஆறி னோடொரு நான்குடை நெடுமுடி அரக்கன்றன் சிரமெல்லாம் *

வேறு வேறுக வில்லது வளைத்தவ னேஎனக் கருள்புரியே *

மாறில் சோதிய மரதகப் பாசடைத் தாமரை மலர்வார்ந்த *

தேறல் மாந்திவண் டின்னிசை முரல திருவெள்ளறை நின்றானே

  

 

  

 

  


19   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 5.3.8

முன்னிவ் வேழுல குணர்வின்றி யிருள்மிக உம்பர்கள் தொழுதேத்த *

அன்ன மாகியன் றருமறை பயந்தவ னேஎனக் கருள்புரியே *

மன்னு கேதகை சூதக மென்றிவை வனத்திடைச் சுரும்பினங்கள் *

தென்ன வென்னவண் டின்னிசை முரல்திரு வெள்ளறை நின்றானே

  

 

  

 

  


20   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 5.3.9

ஆங்கு மாவலி வேள்வியி லிரந்துசென் றகலிட முழுதினையும் *

பாங்கி னாற்கொண்ட பரமநிற் பணிந்தெழு வேனெனக் கருள்புரியே *

ஓங்கு பிண்டியின் செம்மல ரேறிவண் டுழிதர * மாவேறித்

தீங்கு யில்மிழற் றும்படப் பைத்திரு வெள்ளறை நின்றானே

  

 

  

 

  


21   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 5.3.10

** மஞ்சு லாமணி மாடங்கள் சூழ்திரு வெள்ளறை யதன்மேய *

அஞ்ச னம்புரை யும்திரு வுருவனை ஆதியை யமுதத்தை *

நஞ்சு லாவிய வேல்வல வன்கலி கன்றிசொல் ஐயிரண்டும் *

எஞ்ச லின்றிநின் றேத்தவல் லாரிமை யோர்க்ர சாவார்க்களே

  

 

  

 

  


22   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 10.1.4

துளக்க மில்சுட ரை * அவு ணனுடல்

பிளக்கும் மைந்தனைப் பேரில் வணங்கிப்போய் *

அளப்பி லாரமு தையம ரர்க்கருள்

விளக்கினை * சென்று வெள்ளறைக் காண்டுமே

  

 

  

 

  


23   திருமங்கையாழ்வார் – சிறிய திருமடல் – 70

** மதிட் கச்சி ஊரகமே பேரகமே *

பேரா மருதிருத்தான் வெள்ள றையே வெஃகாவே

  

 

  
 

 

  


24   திருமங்கையாழ்வார் – பெரிய திருமடல் – 117

மின்னை இருசுடரை வெள்ளறையுள் கல்லறைமேல்

பொன்னை * மரதகத்தைப் புட்குழியெம் போரேற்றை