Thiruppavai-01


மார்கழித் திங்கள் * மதிநிறைந்த நன்னாளால் *

நீராடப் போதுவீர் * போதுமினோ நேரிழையீர் *

சீர்மல்கும் ஆய்ப்பாடி * செல்வச் சிறுமீர்காள் *

கூர்வேல் கொடுந்தொழிலன் * நந்தகோபன் குமரன் *

ஏரார்ந்த கண்ணி * யசோதை இளம்சிங்கம் *

கார்மேனி செங்கண் * கதிர்மதியம் போல்முகத்தான் *

நாரா யணனே * நமக்கே பறை தருவான் *

பாரோர் புகழ * படிந்தேலோர் எம்பாவாய் *


    

Please leave your valuable suggestions and feedback here