106-Thiruthuvarapathi


Thiru thuvarapathi ( Dwaraka – Sri Kalyana Narayana Perumal Temple )

Azhwar Paasuram Count
பெரியாழ்வார் பெரியாழ்வார் திருமொழி 5
ஆண்டாள் நாச்சியார் திருமொழி 4
திருமழிசை ஆழ்வார் நான்முகன் திருவந்தாதி 1
திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி 2
நம்மாழ்வார் திருவாய்மொழி 1
Total 13

1   பெரியாழ்வார் – பெரியாழ்வார் திருமொழி – 4.1.6

பொல்லா வடிவுடைப் பேய்ச்சிதுஞ்சப் புணர்முலை வாய்மடுக்க

வல்லானை * மாமணி வண்ணனை மருவுமிடம் நாடுதிரேல் *

பல்லாயிரம் பெருந்தேவி மாரொடு பெளவம் ஏறிதுவரை *

எல்லாரும்சூழச் சிங்காசனத்தே இருந்தானைக் கண்டாருளர்


2   பெரியாழ்வார் – பெரியாழ்வார் திருமொழி – 4.7.8

திரைபொரு கடல்சூழ் திண்மதிள் துவரை வேந்துதன் மைத்துனன் மார்க்காய் *

அரசினை யவிய அரசினை யருளும் அரிபுரு டோத்தம னமர்வு *

நிரைநிரை யாக நெடியன யூபம் நிரந்தரம் ஒழுக்குவிட்டு * இரண்டு

கரைபுரை வேள்விப் புகைகமழ் கங்கை கண்டமென் னும்கடி நகரே


3   பெரியாழ்வார் – பெரியாழ்வார் திருமொழி – 4.7.9

** வடதிசை மதுரை சாளக்கி ராமம் வைகுந்தம் துவரை அயோத்தி *

இடமுடை வதரி யிடவகை யுடைய எம்புரு டோத்தம னிருக்கை *

தடவரை யதிரத் தரணிவிண் டிடியத் தலைப்பற்றிக் கரைமரம் சாடி *

கடலினைக் கலங்கக் கடுத்திழி கங்கைக் கண்டமென் னும்கடி நகரே


4   பெரியாழ்வார் – பெரியாழ்வார் திருமொழி – 4.9.4

பதினாறா மாயிரவர் தேவிமார் பணிசெய்ய * துவரை யென்னும்

அதில்நா யகராகி வீற்றிருந்த மணவாளர் மன்னு கோயில் *

புதுநாண் மலர்க்கமலம் எம்பெருமான் பொன்வயிற்றில் பூவே போல்வான் *

பொதுநா யகம்பாவித்து இருமாந்து பொன்சாய்க்கும் புனல ரங்கமே


5   பெரியாழ்வார் – பெரியாழ்வார் திருமொழி – 5.4.10

** தடவரைவாய் மிளிர்ந்துமின்னும் தவளநெடுங் கொடிபோல் *

சுடரொளியாய் நெஞ்சினுள்ளே தோன்றும்என் சோதிநம்பீ *

வடதடமும் வைகுந்தமும் மதிள்துவ ராபதியும் *

இடவகைகள் இகழ்ந்திட்டுஎன்பால் இடவகை கொண்டனையே


6   ஆண்டாள் – நாச்சியார் திருமொழி – 1.4

சுவரில் புராணநின் பேரேழுதிச் சுறவநற் கொடிகளும் துரங்கங்களும் *

கவரிப் பிணாக்களும் கருப்புவில்லும் காட்டித்தந் தேன்கண்டாய் காமதேவா *

அவரைப் பிராயந் தொடங்கிஎன்றும் ஆதரித் தெழுந்தவென் தடமுலைகள் *

துவரைப் பிரானுக்கே சங்கற்பித்துத் தொழுதுவைத் தேனொல்லை விதிக்கிற்றியே


7   ஆண்டாள் – நாச்சியார் திருமொழி – 4.8

ஆவ லன்புட யார்தம் மனத்தன்றி

மேவ லன் * விரை சூழ்துவ ராபதிக்

காவ லன் * கன்று மேய்த்து விளையாடும் *

கோவ லன்வரில் கூடிடு கூடலே


8   ஆண்டாள் – நாச்சியார் திருமொழி – 9.8

காலை யெழுந்திருந்து கரியகுரு விக்கணங்கள் *

மாலின் வரவுசொல்லி மருள்பாடுதல் மெய்ம்மைகொலோ *

சோலை மலைப்பெருமான் துவராபதி யெம்பெருமான் *

ஆலி னிலைப்பெருமான் அவன் வார்த்தை யுரைக்கின்றதே


9   ஆண்டாள் – நாச்சியார் திருமொழி – 12.9

கூட்டிலிருந்து கிளியெப்போதும் கோவிந்தாகோவிந்தாவென்றழைக்கும் *

ஊட்டுக்கொடாதுசெறுப்பனாகில் உலகளந்தானென்றுயரக்கூவும் *

நாட்டிற்றலைப்பழியெய்தி உங்கள்நன்மையழிந்துதலையிடாதே *

சூட்டுயர்மாடங்கள் சூழ்ந்துதோன்றும் துவராபதிக்கென்னையுய்த்திடுமின்


10   திருமழிசை ஆழ்வார் – நான்முகன் திருவந்தாதி – 71

சேயன் அணியன் சிறியன் மிகப்பெரியன் *

ஆயன் துவரைக்கோ னாய்நின்ற- மாயன் * அன்

றோதிய வாக்கதனைக் கல்லார் * உலகத்தில்

ஏதிலராய் மெய்ஞ்ஞான மில்


11   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 6.6.7

முலைத்தடத்த நஞ்சுண்டு துஞ்சப் பேய்ச்சி முதுதுவரைக் குலபதியாக் காலிப்பின்னே *

இலைத்தடத்த குழலூதி யாயர் மாதர் இனவளைகொண் டானடிக்கீ ழெய்தகிற்பீர் *

மலைத்தடத்த மணிகொணர்ந்து வைய முய்ய வளங்கொடுக்கும் வருபுனலம் பொன்னிநாடன் *

சிலைத்தடக்கைக் குலச்சோழன் சேர்ந்த கோயில் திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே


12   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 6.8.7

கட்டேறு நீள்சோலைக் காண்டவத்தைத் தீமூட்டி

விட்டானை * மெய்யம் அமர்ந்த பெருமானை *

மட்டேறு கற்பகத்தை மாதர்க்காய் * வண்துவரை

நட்டானை நாடி நறையூரில் கண்டேனே


13   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 5.3.6

அன்னையென் செய்யிலென் ஊரென் சொல்லிலென் தோழிமீர் *

என்னை யினியுமக் காசை யில்லை யகப்பட்டேன் *

முன்னை யமரர் முதல்வன் வண்துவ ராபதி

மன்னன் * மணிவண் ணன்வாசு தேவன் வலையுளே