090-Thiruvalvaazh


Thiruvalvaazh ( Sri Kolapira Perumal Temple )

Azhwar Paasuram Count
திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி 10
திருமங்கையாழ்வார் பெரிய திருமடல் 1
நம்மாழ்வார் திருவாய்மொழி 11
Total 22

1   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 9.7.1

** தந்தைதாய் மக்களே சுற்றமென் றுற்றுவர் பற்றி நின்ற *

பந்தமார் வாழ்க்கையை நொந்துநீ பழியெனக் கருதி னாயேல் *

அந்தமா யாதியாய் ஆதிக்கும் ஆதியாய் ஆய னாய *

மைந்தனார் வல்லவாழ் சொல்லுமா வல்லையாய் மருவு நெஞ்சே


2   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 9.7.2

மின்னுமா வல்லியும் வஞ்சியும் வென்றநுண் ணிடைநுடங்கும் *

அன்னமென் னடையினார் கலவியை அருவருத் தஞ்சி னாயேல் *

துன்னுமா மணிமுடிப் பஞ்சவர்க் காகிமுன் தூது சென்ற *

மன்னனார் வல்லவாழ் சொல்லுமா வல்லையாய் மருவு நெஞ்சே


3   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 9.7.3

பூணுலா மென்முலைப் பாவைமார் பொய்யினை மெய்யி தென்று *

பேணுவார் பேசுமப் பேச்சைநீ பிழையெனக் கருதி னாயேல் *

நீணிலா வெண்குடை வாணனார் வேள்வியில் மண்ணி ரந்த *

மாணியார் வல்லவாழ் சொல்லுமா வல்லையாய் மருவு நெஞ்சே


4   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 9.7.4

பண்ணுலாம் மென்மொழிப் பாவைமார் பணைமுலை அணைதும் நாம் என்று *

எண்ணுவார் எண்ணம தொழித்துநீ பிழைத்துய்யக் கருதி னாயேல் *

விண்ணுளார் விண்ணின்மீ தியன்ற வேங்கடத்துளார் * வளங்கொள்

முந்நீர் வண்ணனார் வல்லவாழ் சொல்லுமா வல்லையாய் மருவு நெஞ்சே


5   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 9.7.5

மஞ்சுதோய் வெண்குடை மன்னராய்  வாரணம் சூழ வாழ்ந்தார் *

துஞ்சினா ரென்பதோர் சொல்லைநீ துயரெனக் கருதி னாயேல் *

நஞ்சுதோய் கொங்கைமேல் அங்கைவாய் வைத்தவள் நாளை யுண்ட *

மஞ்சனார் வல்லவாழ் சொல்லுமா வல்லையாய் மருவு நெஞ்சே


6   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 9.7.6

உருவினார் பிறவிசேர் ஊன்பொதி நரம்புதோல் குரம்பை யுள்புக்கு *

அருவிநோய் செய்துநின் றைவர்தாம் வாழ்வதற் கஞ்சி னாயேல் *

திருவினார் வேதநான் கைந்துதீ வேள்வியோ டங்க மாறும் *

மருவினார் வல்லவாழ் சொல்லுமா வல்லையாய் மருவு நெஞ்சே


7   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 9.7.7

நோயெலாம் பெய்ததோர் ஆக்கையை மெய்யெனக் கொண்டு * வாளா

பேயர்தாம் பேசுமப் பேச்சைநீ பிழையெனக் கருதி னாயேல் *

தீயலா வெங்கதிர்த் திங்களாய் மங்குல்வா னாகி நின்ற *

மாயனார் வல்லவாழ் சொல்லுமா வல்லையாய் மருவு நெஞ்சே


8   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 9.7.8

மஞ்சுசேர் வானெரி நீர்நிலம்  காலிவை மயங்கி நின்ற *

அஞ்சு சேராக் கையை அரணமன் றென்றுய்யக் கருதி னாயேல் *

சந்துசேர் மென்முலைப் பொன்மலர்ப் பாவையும் தாமும் * நாளும்

வந்துசேர் வல்லவாழ் சொல்லுமா வல்லையாய் மருவு நெஞ்சே


9   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 9.7.9

வெள்ளியார் பிண்டியார் போதியார்  என்றிவர் ஓது கின்ற *

கள்ளநூல் தன்னையும் கருமமன் றென்றுய்யக் கருதி னாயேல் *

தெள்ளியார் கைதொழும் தேவனார் மாமுநீர் அமுது தந்த *

வள்ளலார் வல்லவாழ் சொல்லுமா வல்லையாய் மருவு நெஞ்சே


10   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 9.7.10

** மறைவலார் குறைவிலார் உறையுமூர் வல்லவாழடிகள் தம்மை *

சிறைகுலா வண்டறை சோலைசூழ் கோலநீள் ஆலி நாடன் *

கறையுலா வேல்வல்ல கலியன்வாய் ஒலியிவை கற்று வல்லார் *

இறைவராய் இருநிலம் காவல்பூண் டின்பநன் கெய்து வாரே


11   திருமங்கையாழ்வார் – பெரிய திருமடல் – 118

** மன்னும் அரங்கத்தெம் மாமணியை * வல்லவாழ்

பின்னை மணாளனை பேரில் பிறப்பிலியை


12   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 5.9.1

** மானேய் நோக்குநல்லீர்! வைகலும்வினை யேன்மெலிய *

வானார் வண்கமுகும் மதுமல்லிகை யுங்கமழும் *

தேனார் சோலைகள்சூழ் திருவல்ல வாழுறையும்ரை

கோனாரை * அடியேண் அடிகூடுவ தென்றுகொலோ


13   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 5.9.2

என்றுகொல் தோழிமீர்காளெம்மைநீர்நலிந் தென்செய்தீரோ *

பொன்திகழ் புன்னைமகிழ் புதுமாதவி மீதணவி *

தென்றல் மணங்கமழும் திருவல்ல வாழ்நகருள்

நின்றபி ரான் * அடிநீ றடியோங்கொண்டு சூடுவதே


14   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 5.9.3

சூடும் மலர்க்குழலீர்! துயராட்டியே னைமெலிய *

பாடுநல் வேதவொலி பரவைத்திரை போல்முழங்க *

மாடுயர்ந் தோமப்புகை கமழும்தண் திருவல்லவாழ் *

நீடுறை கின்றபிரான் கழல்கண்டுங்கொல் நிச்சலுமே


15   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 5.9.4

நிச்சலும் தோழிமீர்காள்! எம்மைநீர்நலிந் தென்செய்தீரோ *

பச்சிலை நீள்கமுகும் பலவும்தெங்கும் வாழைகளும் *

மச்சணி மாடங்கள்மீ தணவும்தண் திருவல்லவாழ் *

நச்சர வினணைமேல் நம்பிரானது நன்னலமே


16   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 5.9.5

நன்னலத் தோழிமீர்காள் நல்லவந்தணர் வேள்விப்புகை *

மைந்நலங் கொண்டுயர்விண் மறைக்கும்தண் திருவல்லவாழ் *

கன்னலங் கட்டிதன்னைக் கனியையின் னமுதந்தன்னை *

என்னலங் கொள்சுடரை என்றுகொல்கண்கள் காண்பதுவே


17   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 5.9.6

காண்பதெஞ் ஞான்றுகொலொ வினையேன்கனி வாய்மடவீர் *

பாண்குரல் வண்டினோடு பசுந்தென்றலு மாகியெங்கும் *

சேண்சினை யோங்குமரச் செழுங்கானல் திருவல்லவாழ் *

மாண்குறள் கோலப்பிரான் மலர்த்தாமரைப் பாதங்களே


18   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 5.9.7

பாதங்கள் மேலணிபூத் தொழக்கூடுங்கொல் பாவைநல்லீர் *

ஓதநெ டுந்தடத்துள் உயர்தாமரை செங்கழுநீர் *

மாதர்கள் வாண்முகமும் கண்ணுமேந்தும் திருவல்லவாழ் *

நாதனிஞ் ஞாலமுண்ட நம்பிரான்தன்னை நாடோறுமே


19   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 5.9.8

நாள்தோறும் வீடின்றியே தொழக்கூடுங்கொல் நன்னுதலீர் *

ஆடுறு தீங்கரும்பும் விளைசெந்நெலு மாகியெங்கும் *

மாடுறு பூந்தடஞ்சேர் வயல்சூழ்தண் திருவல்லவாழ் *

நீடுறை கின்றபிரான் நிலந்தாவிய நீள்கழலே


20   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 5.9.9

கழல்வளை பூரிப்பயாம் கண்டுகைதொழக் கூடுங்கொலோ *

குழலென்ன யாழுமென்னக் குளிர்சோலையுள் தேனருந்தி *

மழலை வரிவண்டுகள் இசைபாடும் திருவல்லவாழ் *

சுழலின் மலிசக்கரப் பெருமானது தொல்லருளே


21   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 5.9.10

தொல்லருள் நல்வினையால் சொல்லக்கூடுங்கொல் தோழிமீர்காள் *

தொல்லருள் மண்ணும்விண்ணும் தொழநின்ற திருநகரம் *

நல்லரு ளாயிரவர் நலனேந்தும் திருவல்லவாழ் *

நல்லருள் நம்பெருமான் நாராயணன் நாமங்களே


22   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 5.9.11

** நாமங்க ளாயிர முடையநம்பெரு மானடிமேல் *

சேமங்கொள் தென்குருகூர்ச்சடகோபன் தெரிந்துரைத்த *

நாமங்க ளாயிரத்துள் இவைபத்தும் திருவல்லவாழ் *

சேமங்கொள் தென்னகர்மேல் செப்புவார்சிறந் தார்பிறந்தே