023-ThiruIndhaloor


Thiru Indhaloor ( Sri Parimala Ranganatha Perumal Temple )

Azhwar Paasuram Count
திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி 10
திருமங்கையாழ்வார் பெரிய திருமடல் 1
Total 11

1   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 4.9.1

** நும்மைத் தொழுதோம் நுந்தம் பணிசெய் திருக்கும் நும்மடியோம் *

இம்மைக் கின்பம் பெற்றோ மெந்தாய் இந்த ளூரீரே *

எம்மைக் கடிதாக் கரும மருளி ஆவா வென்றிரங்கி *

நம்மை யொருகால் காட்டி நடந்தால் நாங்க ளுய்யோமே


2   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 4.9.2

** சிந்தை தன்னுள் நீங்கா திருந்த திருவே மருவினிய

மைந்தா * அந்த ணாலி மாலே சோலை மழகளிறே *

நந்தா விளக்கின் சுடரே நறையூர் நின்ற நம்பீ * என்

எந்தாய் இந்த ளூராய் அடியேற் கிறையு மிரங்காயே


3   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 4.9.3

பேசு கின்ற திதுவே வைய மீரடி யாலளந்த *

மூசி வண்டு முரலும கண்ணி முடியீர் * உம்மைக்காணும்

ஆசை யென்னும் கடலில் வீழ்ந்திங் கயர்ந்தோம் * அயலாரும்

ஏசு கின்ற திதுவே காணும் இந்த ளூரீரே


4   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 4.9.4

ஆசை வழுவா தேத்து எமக்கிங் கிழுக்காய்த்து * அடியோர்க்குத்

தேச மறிய வுமக்கே யாளாய்த் திரிகின் றோமுக்கு *

காசி னொளியில் திகழும் வண்ணம் காட்டீர் எம்பெருமான் *

வாசி வல்லீர் இந்த ளூரீர் வாழ்ந்தே போம்நீரே


5   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 4.9.5

தீயெம் பெருமான் நீரெம் பெருமான் திசையு மிருநிலனு

மாய் * எம் பெருமா னாகி நின்றா லடியோம் காணோமால் *

தாயெம் பெருமான் தந்தை தந்தை யாவீர் * அடியேமுக்

கேயெம் பெருமா னல்லீ ரோநீர் இந்த ளூரீரே


6   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 4.9.6

சொல்லா தொழிய கில்லேன் அறிந்த சொல்லில் * நும்மடியார்

எல்லா ரோடு மொக்க வெண்ணி யிருந்தீ ரடியேனை *

நல்ல ரறிவீர் தீயா ரறிவீர் நமக்கிவ் வுலகத்தில் *

எல்லா மறிவீ ரீதே யறியீர் இந்த ளூரீரே


7   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 4.9.7

மாட்டீ ரானீர் பணிநீர் கொள்ள எம்மைப் பணியறியா

விட்டீர் * இதனை வேறே சொன்னோம் இந்த ளூரீரே *

காட்டீ ரானீர் நுந்த மடிக்கள் காட்டில் * உமக்கிந்த

நாட்டே வந்து தொண்டரான நாங்க ளுய்யோமே


8   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 4.9.8

முன்னிவண்ணம்பாலின் வண்ணம் முழுதும் நிலைநின்ற *

பின்னைவண்ணம் கொணடல்வண்ணம் வண்ணமெண்ணுங்கால் *

பொன்னின்வண்ணம்மணியின் வண்ணம் புரையுந்திருமேனி *

இன்னவண்ணமென்றுகாட்டீர் இந்தளூரிரே


9   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 4.9.9

எந்தை தந்தை தம்மா னென்றென் றெமெரே றெமரெ ழேளவும் *

வந்து நின்ற தொண்டரோர்க்கே வாசி வல்லீரால் *

சிந்தை தன்னுள் முந்தி நிற்றிர் சிறிதும் திருமேனி *

இந்த வண்ண மென்று காட்டீர் இந்த ளூரீரே


10   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 4.9.10

** ஏரார் பொழில்சூழ் இந்த ளூரி லெந்தை பெருமானை *

காரார் புறவின் மங்கை வேந்தன் கலிய னொலிசெய்த *

சீராரின்சொல் மாலை கற்றுத் திரிவா ருலகத்தில் *

ஆரா ரவரே யமரர்க் கென்று மமர ராவாரே


11   திருமங்கையாழ்வார் – பெரிய திருமடல் – 126

கோட்டியூர்

அன்ன வுருவில் அரியை * திருமெய்யத்து

இன்னமுத வெள்ளத்தை இந்தளூர் அந்தணனை